TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னையில் இன்று நடைபெறுகிறது

Share This Article:

சென்னையில் இன்று தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு! அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் காவிரி நீர், மேகதாது அணை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னையில் இன்று நடைபெறுகிறது

சென்னை: மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 9 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.

இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் தென் மண்டல குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதில் தென் மண்டல குழுவின் துணைத் தலைவராக உள்ள முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொள்கிறார்.

முக்கிய விவகாரங்கள்

இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பாதுகாப்பு, போதைப்பொருள் வர்த்தகம், தொழில் முதலீடுகள், நீர்ப்பங்கீடு, கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடைபெறுகிறது.

Content image

தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள்

மாநாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு சார்பில் தனது கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மாநிலத்தின் முக்கிய தேவைகள் தொடர்பான விவகாரங்களும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

இந்த மாநாட்டில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்க், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், அந்தமான்-நிக்கோபர் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அஜய் குமார் சிங் உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions