TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

'நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல; ராகுல் காந்தியின் குரலை எப்.ஐ.ஆர்-ஆல் நசுக்க முடியாது' - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆவேசம்

Share This Article:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உத்தரகாண்டில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், "சமூக நீதிக்கான ராகுல் காந்தியின் குரலை எப்.ஐ.ஆர்-ஆல் நசுக்கிவிட முடியாது; பாஜ அரசின் மிரட்டல்களுக்குப் பயந்து பின்வாங்க நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல" என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது 'எக்ஸ்' பக்கத்தில் மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல; ராகுல் காந்தியின் குரலை எப்.ஐ.ஆர்-ஆல் நசுக்க முடியாது' - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆவேசம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சமூக நீதிக்கான சமரசமற்ற குரலை, பாஜக அரசின் எந்தக் கோழைத்தனமான எப்.ஐ.ஆர் (FIR) நடவடிக்கைகளாலும் நசுக்கிவிட முடியாது என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் (X) தளப் பதிவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பின்னணி மற்றும் சர்ச்சை:

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, சில அமைப்புகள் அந்த மைதானத்தில் 'சுத்திகரிப்பு யாகம்' நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தலித் சமூகத்தைச் சேர்ந்த கார்கேவை அவமதிக்கும் சாதிய மனோபாவம் என காங்கிரஸ் கடுமையாகக் சாடியது. புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, இந்த சுத்திகரிப்பு சடங்குக்குக் காரணமானவர்கள் மீது எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Content image

இதற்கிடையே, ராகுல் காந்தியின் இந்த விமரிசனம் ஒரு சாதாரண தூய்மைப் பணியைச் சாதியக் கண்ணோட்டத்துடன் சித்தரித்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உத்தரகாண்ட் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டப் பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல:

ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தனது கண்டனப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions