மது கடைகளுக்கு கூடுதல் பணம் வசூலா..? இந்த எண்ணில் புகார் தரலாம்
டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலித்தல் உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் 24 மணி நேரமும் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் WhatsApp மூலம் தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் மதுக்கடைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகை வசூலித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக நுகர்வோர், பொதுமக்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் இதர பிரச்சினைகளைத் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக 1800-889-2015 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 73977 20230 என்ற WhatsApp எண்ணிலும் 24 மணி நேரமும் புகார்களைத் தெரிவிக்கலாம். குறிப்பாக, மதுபானங்களின் விலையை விட கூடுதல் தொகை வசூலிப்பது போன்ற புகார்களையும் பொதுமக்கள் இந்த சேவை மூலம் பதிவு செய்ய முடியும்.
மேலும், டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலமாகவும் பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம். புகார்கள் பெறப்பட்ட பின்னர் அவை தொடர்புடைய அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தல் அல்லது பிற முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம்.

0 Comments
No comments yet. Be the first to comment.