TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கரும்பு சாகுபடியை பெருக்கி படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

Share This Article:

செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அரவை பருவம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஒப்பந்த தொழிலாளர் நியமனப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி ஆலையை இயக்காமல் கைவிட்டால், இதனை நம்பியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், ஆலையைத் தொடர்ந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கரும்பு சாகுபடியை பெருக்கி படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலை:

செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் கடந்த 1961-ஆம் ஆண்டு மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பழமையான மற்றும் அதிக அரவைத் திறன் கொண்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். நாளொன்றுக்கு 2,500 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெறுவது வழக்கம்.


முடங்கும் பணிகள்: விவசாயிகள் சந்தேகம்:

வழக்கமாக, சர்க்கரை உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் ஜூலை மாதத்திலேயே தொடங்கிவிடும். இதன் முதற்கட்டமாக, ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் இணைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படும். ஆனால், நடப்பு ஆண்டில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் முடிந்து செப்டம்பர் பிறந்துவிட்ட நிலையிலும், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளின் அரவை பருவம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஒப்பந்தப் பணியாளர் நியமனம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படைப் பணிகளும் படாளம் ஆலையில் மேற்கொள்ளப்படாததால், இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற அச்சமும், ஐயமும் எழுந்துள்ளது.




Content image

ஆலை முடங்கிய பின்னணி:

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திண்டிவனம், வானூர், மேல்மருவத்தூர், படாளம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 10 கரும்பு கோட்டங்களைச் சேர்ந்த 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இப் பகுதிகளில் உள்ள 1,62,327 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு இந்த ஆலைக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆரம்பக் காலத்தில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் கரும்பு அரவையுடன் உற்பத்தியைத் தொடங்கிய இந்த ஆலை, ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்புகளை அரவை செய்து சாதனை படைத்தது. ஆனால், காலப்போக்கில் ஆலையைத் தனியார் மயமாக்கும் நோக்குடன் கரும்பு அரவை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கடந்த 2001-ஆம் ஆண்டில் படாளம் சர்க்கரை ஆலை முழுமையாக மூடப்பட்டது.


தமிழக அரசுக்குக் கோரிக்கை:

தமிழகத்தில் சர்க்கரைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய படாளம் சர்க்கரை ஆலையை மூடுவதற்கு அரசிடம் எந்தவொரு நியாயமான காரணமும் கிடையாது. எனவே, இந்த ஆலையை மூடும் திட்டம் ஏதேனும் இருந்தால், அதைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். கரும்பு சாகுபடியை இப்பகுதிகளில் மீண்டும் பெருக்கி, படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தொடர்ந்து லாபகரமாக இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions