TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

2029-ல் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்- எம்.எல்.ஏ கனிமொழி பேட்டி...

Share This Article:

2029 மக்களவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என எம்.எல்.ஏ. கனிமொழி தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் புதிய விவாதம் உருவாகியுள்ளது.

2029-ல் தவெக தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்- எம்.எல்.ஏ கனிமொழி பேட்டி...

2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. கனிமொழி தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, 2029ஆம் ஆண்டு பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யாது என்றும், தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

Content image

மேலும், 2026ஆம் ஆண்டு தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தைப் போலவே, 2029ஆம் ஆண்டிலும் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என அவர் தெரிவித்தார். தனது தலைவர் விஜய் 2029ஆம் ஆண்டு பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் கனிமொழி கூறினார்.

இதனிடையே, கனிமொழியின் கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் வேட்பாளர் எனத் தெரிவித்தார். மேலும், தவெக எம்.எல்.ஏ.க்கள் தங்களது தலைவரின் மீதான ரசிகர் மனநிலையில் இருப்பதால் விஜய்யை பிரதமர் வேட்பாளராகக் கூறுவதாகவும் அவர் விமர்சித்தார்.

2029 மக்களவைத் தேர்தல் இன்னும் தொலைவில் உள்ள நிலையில், விஜய் மற்றும் ராகுல் காந்தியைச் சுற்றி உருவாகியுள்ள இந்த பிரதமர் வேட்பாளர் விவாதம் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions