பிக்பாஸ் சீசன் 10: இணையத்தில் வைரலாகும் 21 போட்டியாளர்களின் பட்டியல்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 21 போட்டியாளர்களின் உத்தேசப் பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும், இந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், போட்டியாளர்கள் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பிக்பாஸ் சீசன் 10-ல் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படும் 21 பேரின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள், டிஜிட்டல் தளத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பட்டியலில் ஜாய் கிரிசில்டா, நடிகை பிரியா ராமன், ஜனனி அசோக், டாலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய், சின்னத்திரை நடிகர் ஆர்யன், புவியரசு, திரைப்பட விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, நவீன், வினோத் பாபு, குரேஷி, சிந்தியா வினோலின், அக்ஷிதா அசோக், ஃபரினா மற்றும் ஹேமா ராஜ்குமார் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பானுமதி, கரிஷ்மா, முனியம்மா, ஜேசன் கௌஷி, ஒப்பனை கலைஞர் ஸ்வப்னா மற்றும் காயு ஸ்ரீ ஆகியோரின் பெயர்களும் இந்த உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சீசனின் முக்கிய அம்சமாக ‘பிக்பாஸ் – தி காமன் மேன்’ நிகழ்ச்சி மூலம் பொதுமக்களில் இருந்து தேர்வு செய்யப்படும் போட்டியாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மூன்று பொதுமக்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த 21 பேர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறும் கிராண்ட் லாஞ்ச் நிகழ்ச்சியில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

0 Comments
No comments yet. Be the first to comment.