ஐஆம் கேம் கதையைக் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டேன்: சம்யுக்தா விஸ்வநாதன்
“ ஐஆம் கேம்” திரைப்படத்தின் கதையை கேட்டவுடனேயே நடிக்க ஒப்புக்கொண்டதாக நடிகை சம்யுக்தா வில்வநாதன் தெரிவித்துள்ளார். படத்தின் கதை மற்றும் தனது கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகை சமுத்திரா வில்வநாதன், “ ஐஆம் கேம்” திரைப்படம் குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசிய சம்யுக்தா வில்வநாதன், சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்ததாகவும், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகளும் தாக்கமும் தனக்கு மிகவும் முக்கியமானவை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “ ஐஆம் கேம்” படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாகக் கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்ததாக அவர் கூறினார். கதையும் கதாபாத்திரமும் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகவும், அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்

0 Comments
No comments yet. Be the first to comment.