TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி நல்லுலகைப் படைத்திடுவோம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

Share This Article:

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி தர்மம், அன்பு, அறம் நிறைந்த நல்லுலகை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி நல்லுலகைப் படைத்திடுவோம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கிருஷ்ணரின் அவதார தினம் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி உள்ளிட்ட பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் இந்த நன்னாளில் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Content image

அநீதிக்கு எதிராக அறம் வெல்லும் என்பதையும், எத்தகைய சூழ்நிலையிலும் கடமையைத் தவறாமல் செய்ய வேண்டும் என்பதையும் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகள் உணர்த்துவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும் என்றும், கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி அன்பும் அறமும் நிறைந்த நல்லுலகை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions