வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் த.வெ.க. அமைச்சர்கள் சந்திப்பு!
வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனை த.வெ.க. அமைச்சர்கள் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கலந்துரையாடினர்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எம்.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் இணைந்து திருமாவளவனை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திப்பின்போது அரசியல் சூழல், சமூகநீதி மற்றும் மக்கள் நலன் தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.
த.வெ.க. மற்றும் வி.சி.க. இடையிலான அரசியல் தொடர்புகள் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நிலையில், அக்கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்னதாகவும் த.வெ.க. தரப்பிலிருந்து வி.சி.க. தலைவர் திருமாவளவனை அணுகிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், த.வெ.க. அமைச்சர்கள் மூவர் ஒரே நேரத்தில் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.