தீபாவளிக்கு அதிரடி விருந்து.. சூர்யாவின் புதிய படத்தின் டைட்டில் வெளியானது!
சூர்யா–ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சூர்யா 47’ படத்திற்கு ‘Scene’ என தலைப்பு வைக்கப்படலாம் என்றும், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
"சூர்யா" நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாக ‘சூர்யா 47’ என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு ‘Scene’ என தலைப்பு வைக்கப்படலாம் என்றும், வரும் நவம்பர் 6, 2026 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், படத்தின் தலைப்பும் வெளியீட்டு தேதியும் தயாரிப்பு தரப்பால் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை
ஜித்து மாதவனின் தமிழ் இயக்குநர் அறிமுகப் படமாக உருவாகும் இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், சூர்யா ஏற்கும் புதிய கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.