TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு

Share This Article:

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி இன்று தனது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. இதன் மூலம் இரு தொகுதிகளிலும் நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, த.வெ.க.வில் இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக காலியான இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Content image

நான்கு முனைப் போட்டி

அதன்படி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் பரந்தாமன் (மதுராந்தகம்), சுகன்யா (தாராபுரம்) போட்டியிடுகிறார்கள். தவெக சார்பில் மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோரும், அதிமுக சார்பில் கணிதா சம்பத், பானுமதி ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியும் இன்று தனது வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான நான்கு முனைப் போட்டி உறுதியானது.

Content image

கம்யூனிஸ்டு நிலைப்பாடு என்ன?

த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இணையவில்லை. எனவே அவர்கள் தமிழகத்தில் நடக்கும் 2 தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக சலீம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்தை நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.

அதே நேரத்தில், த.வெ.க. கூட்டணி சார்பிலும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, யார், யாரை ஆதரிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions