TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

Share This Article:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொசுக்களை ஒழிக்கும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படையான கொசுக்களை ஒழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவை பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே 9 பேரின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.


Content image

எனவே, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படை காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.







0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions