துனிசியாவில் கனமழை, வெள்ளம் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பெய்த கனமழையால் தலைநகர் டுனிஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள துனிசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டுனிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் வாகனங்கள் வெள்ளநீரில் சிக்கியதாகவும், பொதுமக்கள் சாலைகளில் தேங்கிய நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் மூடல்
மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக டுனிஸ் நகரில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பிற்பகல் நேர வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. குறுகிய நேரத்தில் அதிகளவு மழை பெய்ததால் நகரின் சில பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்புகள் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டன.
மின்சாரம், இணைய சேவைகளும் பாதிப்பு
கனமழையின் தாக்கத்தால் சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் இணைய சேவைகளில் தடங்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சில குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
துனிசியாவின் குடிமைப் பாதுகாப்புப் படையினர் வெள்ளநீரில் சிக்கிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை மீட்பது, குடியிருப்புகளில் தேங்கிய நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக கிரேட்டர் டுனிஸ் மற்றும் சாஹெல் பகுதிகளில் மீட்பு ந

0 Comments
No comments yet. Be the first to comment.