TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் அனாவசிய மின்வெட்டு சீரடையும்: மின்வாரியம் அறிவிப்பு

Share This Article:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மின்வெட்டு தொடர்பாக மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் தேவையற்ற மின்வெட்டு நிலை சீரடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் அனாவசிய மின்வெட்டு சீரடையும்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மாநிலத்தில் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மின் தேவையை சமாளிக்கும் வகையில் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் திறந்த சந்தை மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Content image

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவுவதால் மின் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் சில நாட்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்வதுடன், நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலமாக நிலையான மின்விநியோகத்தை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளின் மூலம் தற்போது காணப்படும் அறிவிக்கப்படாத மற்றும் தேவையற்ற மின்வெட்டு நிலை அடுத்த மாதம் முதல் சீரடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மின்தடை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மின்வெட்டு தொடர்பான புகார்களை விரைவாக கையாளும் வகையில் புதிய புகார் தீர்வு அமைப்பை அக்டோபரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions