TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ஆடியோ உரிமையில் சாதனை: நம்பர் 1 இடத்தை பிடித்த ஏ.ஆர்.ரகுமான்!

Share This Article:

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் 'ராமாயணா' திரைப்படத்தின் ஆடியோ உரிமம் இந்திய அளவில் சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய திரையுலகில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆடியோ உரிமையில் சாதனை: நம்பர் 1 இடத்தை பிடித்த ஏ.ஆர்.ரகுமான்!

இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், கன்னட நடிகர் யாஷ் ராவணனாகவும் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த காவியத் திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி:

இப்படத்திற்கு இந்தியாவின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இவர்களின் கூட்டணியால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.


Content image

மிரட்டலான ஆடியோ பிசினஸ் சாதனை:

தற்போது வெளியாகியுள்ள நம்பகமான தகவலின்படி, 'ராமாயணா' படத்தின் இரண்டு பாகங்களின் ஆடியோ உரிமமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 85 கோடிக்கு (டி-சீரிஸ் நிறுவனத்திற்கு) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் ஆடியோ உரிமம் ரூ. 30 கோடிக்கு விற்கப்பட்டதே உச்சகட்ட சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை 'ராமாயணா' படம் தவிடுபொடியாக்கியுள்ளது.

சினிமா வியாபாரத்தைப் பொறுத்தவரை எந்த இசையமைப்பாளரின் படத்தின் ஆடியோ உரிமம் அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ, அவரே நம்பர் 1 இசையமைப்பாளராகக் கருதப்படுவார். அந்த வகையில் இந்த அசாத்தியமான டீல் மூலம் ஏ.ஆர். ரகுமான் இந்திய அளவில் மீண்டும் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்ற அரியாசனத்தை அலங்கரிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions