TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 27’ பட அறிவிப்பு வெளியானது – ‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் கூட்டணி

Share This Article:

'பார்க்கிங்’ திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படமான ‘எஸ்கே 27’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற நிலையில், அதன் இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள புதிய படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 27’ பட அறிவிப்பு வெளியானது – ‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் கூட்டணி

SK 27:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், அவரது புதிய திரைப்படமான ‘எஸ்கே 27’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘எஸ்கே 27’ திரைப்படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இதன் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் முதன்முறையாக இணைகின்றனர்.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. குறிப்பாக, யதார்த்தமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் அணுகுமுறை காரணமாக இப்படம் பேசப்பட்டது.

Content image

அடுத்தடுத்த படங்கள்

'அமரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான 'மதராளி' மற்றும் 'பராசக்தி' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான பூஜையும் நடைபெற்று முடிந்தது. 'பார்க்கிங்' திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions