நெற்றியில் முத்தமிட்டதற்கு மரண தண்டனையா? மெக்காவில் வங்கதேச ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்!
புனித மெக்கா நகரிலுள்ள மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில், நெற்றியில் முத்தமிட்டதற்காகவே இந்த உச்சக்கட்ட தண்டனை வழங்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன
புனித மெக்கா நகரிலுள்ள மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில், நெற்றியில் முத்தமிட்டதற்காகவே இந்த உச்சக்கட்ட தண்டனை வழங்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.வங்கதேசத்தின் பிரம்மன்பாரியா பகுதியைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இருவரும் மெக்காவில் உள்ள மசூதியில் தூய்மைப் பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், மசூதி வளாகத்திற்குள் இவர்கள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி சவுதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சவுதி சட்ட விதிகளில் உள்ள 'தாசிர்' (Tazir) பிரிவின் கீழ் இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மன்னரின் ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் 14 அன்று மெக்கா பகுதியிலேயே இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வங்கதேச அரசு முற்றிலும் இருட்டில் வைக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் என்ன தண்டனை விதிக்கப்பட்டது, விசாரணை எவ்வாறு நடந்தது என்பது குறித்த எந்த விவரங்களையும் சவுதி அரசு முன்கூட்டியே வங்கதேச அரசிடம் தெரிவிக்கவில்லை. தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரே வங்கதேச துணைத் தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மசூதிக்குள் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டதாகவும், அதற்குத்தான் இந்த கொடூரமான மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன. ஆனால், சவுதி உள்துறை அமைச்சகம் இதுவொரு 'ஒழுக்கக்கேடான செயல்' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. அவர்கள் செய்த உண்மையான குற்றம் என்ன என்பது குறித்த முழுமையான விவரங்களை சவுதி அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

0 Comments
No comments yet. Be the first to comment.