TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தமிழகத்தை நெருங்கும் புயல்? 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை!

Share This Article:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், 17 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வடகடலோரப் பகுதிகளிலும் மழை தொடரக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை நெருங்கும் புயல்? 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை எச்சரிக்கை!

சென்னை,

வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் "புயல்" வங்கக்கடலில் நாளை (23-ந்தேதி) உருவாக வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் முன்னேற்றம், கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சூழல் மற்றும் காற்றின் திசை மாற்றம் ஆகியவை மழைப்பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, அலுவலகங்களுக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் நீர்த்தேக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, மழை பெய்யும் நேரங்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும், அதிகாரிகள் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதும் பாதுகாப்பானதாக இருக்கும்.

Content image

17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பின்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, பின்வரும் 17 மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  1. தூத்துக்குடி
  2. திருநெல்வேலி
  3. கன்னியாகுமரி
  4. தென்காசி
  5. விருதுநகர்
  6. ராமநாதபுரம்
  7. தேனி
  8. திண்டுக்கல்
  9. மதுரை
  10. கோயம்புத்தூர்
  11. நீலகிரி
  12. சிவகங்கை
  13. புதுக்கோட்டை
  14. தஞ்சாவூர்
  15. திருவாரூர்
  16. நாகப்பட்டினம்
  17. மயிலாடுதுறை

இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட தமிழகத்திலும் மழை தொடரும்

தென் மாவட்டங்களில் மட்டுமின்றி, வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருச்சிராப்பள்ளி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் சூழலில், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வதுடன் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

Content image

சென்னையைப் பொறுத்தவரையில், நாளை (அதாவது இன்று) மற்றும் 24-ந்தேதிகளில் மிதமான மழைக்கு, 25-ந்தேதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேலும் வலுவடைந்து மேற்கு தென் மேற்கு திசையில் நகரும்.

இந்த நிகழ்வு தொடர்ந்து வலுப்பெற்று புயலாகவும் மாறுவதற்கு சாதகமான சூழல் அதிகமாகவே இருக்கிறது. அந்த புயலின் தாக்கம் தமிழகத்துக்கு இருக்காது. பின்னர் அதுதொடர்பான அறிவிப்பு தெரிவிக்கப்படும்.

அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஏற்கனவே உருவாகி இருந்தது. அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சோமாலிய கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் சென்றது. நவம்பரில் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகவே பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், இந்த ஆண்டும் பருவமழை ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

‘முரசு புயல்’

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை (அக்.23) புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் அதற்கு "முரசு புயல்’' என பெயர் சூட்டப்படும். வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை சூட்டும் குழுவிடம் இந்தப் பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions