TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நேஹா போரா மனு மீது இன்று மாலை 6 மணிக்கு உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்!

Share This Article:

போலீசார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யவும், தனக்கு எதிராகக் கட்டாய நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கவும் கோரி நேஹா போரா தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மாலை 6 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது. நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்பு நடைபெற்ற விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் சுமார் மூன்று மணி நேரம் கேட்கப்பட்டன.

நேஹா போரா மனு மீது இன்று மாலை 6 மணிக்கு உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்!

புதுடெல்லி:

போலீசார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா தாக்கல் செய்த மனு மீது, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மாலை 6 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது.

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நேஹா போராவுக்கு, கடந்த 17-ஆம் தேதி டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதில், சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி, விசாரணைக் காலத்தில் அமைதியைப் பேணுவதாக ரூ.10,000-க்கான பிணைப்பத்திரத்தைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Content image

போலீஸ் நோட்டீஸுக்கு எதிராக மனு

காவல்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனக்கு எதிராக எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி நேஹா போரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேஹா போரா தரப்பு மற்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

மூன்று மணி நேரம் விசாரணை

இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி சுமார் மூன்று மணி நேரம் கேட்டறிந்தார். இதையடுத்து, மனு மீதான உத்தரவை ஒத்திவைத்த நீதிபதி, இன்று (23-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதனால், காவல்துறையின் நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய நேஹா போராவின் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ள உத்தரவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions