TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தமிழகத்தை சூழும் இரு காற்றழுத்த மண்டலங்கள்: அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிதீவிர மழை எச்சரிக்கை!

Share This Article:

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகியுள்ள இரு வேறு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளுக்குப் பயணம் செல்வதையும் அருவிகளில் குளிப்பதையும் மக்கள் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சூழும் இரு காற்றழுத்த மண்டலங்கள்: அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிதீவிர மழை எச்சரிக்கை!

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் என இரண்டு திசைகளிலும் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் வலுப்பெற்றுள்ளன. கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உள்ள தாழ்வுப் பகுதி அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறவுள்ளது. அதேசமயம், கேரளக் கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலிலும் மற்றொரு வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டு தமிழகத்தை மிரட்டி வருகிறது.அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த அமைப்பு தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதால், வடகிழக்குப் பருவமழை அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியில் மிகத் தீவிரமாக இருக்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய அதீத கனமழை வெளுத்து வாங்கும்.

Content image

நீலகிரியில் ஏற்கனவே கொட்டித்தீர்த்த கனமழையால் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிகக் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக்கூடும். எனவே, நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்குத் தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதையோ அல்லது அருவிகளில் இறங்குவதையோ கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் என இரண்டு புறமும் புயல் சின்னங்கள் வலுவடைந்து வருவதால் மழையின் தீவிரம் மேலும் கூடும்; எனவே மக்கள் மிகுந்த பாதுகாப்பாகவும் உஷாராகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions