TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

2.50 லட்சம் மரங்களை அழித்த கூகுள்! AI டேட்டா சென்டர் பணிகளுக்கு அதிரடித் தடை!

Share This Article:

பின்லாந்தில் கூகுள் நிறுவனத்தின் புதிய AI டேட்டா சென்டருக்காக சுமார் 2.50 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டதால் கடும் சுற்றுச்சூழல் சர்ச்சை வெடித்துள்ளது. முறையான ஆய்வுகள் இன்றி மரங்கள் அழிக்கப்பட்டதால், கட்டுமானப் பணிகளை நிறுத்த அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

2.50 லட்சம் மரங்களை அழித்த கூகுள்! AI டேட்டா சென்டர் பணிகளுக்கு அதிரடித் தடை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சிக்காக கூகுள் நிறுவனம் பின்லாந்தில் மேற்கொண்டுள்ள புதிய டேட்டா சென்டர் திட்டம் பெரும் சுற்றுச்சூழல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையத்தை அமைப்பதற்காக அங்கு சுமார் 2.50 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயற்கைக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டில் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.முஹோஸ் மற்றும் ஒட்டன்மாக்கி ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, மேல் மண் அகற்றப்பட்டு கட்டுமானச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைநீரில் மண் கலந்து அருகில் உள்ள நீர்நிலைகள் மாசடைவதுடன், வனவிலங்குகளின் வாழ்விடங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் என இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.

Content image

முறையான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகளை (EIA) முழுமையாக முடிப்பதற்கு முன்பே கூகுள் நிறுவனம் நிலத்தை சீரமைத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், உடனடியாக கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து தங்களது நடவடிக்கைக்கு மன்னிப்புக் கோரியுள்ள கூகுள் நிறுவனம், 130 ஹெக்டேர் பரப்பளவில் மீண்டும் புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு உறுதியளித்துள்ளது.பின்லாந்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த பல பில்லியன் யூரோக்களை கூகுள் முதலீடு செய்திருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இயற்கை வளங்களை எந்த அளவுக்கு அழிக்கலாம் என்ற மிக முக்கியமான கேள்வி தற்போது எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்களுக்குப் பதிலாக புதிய கன்றுகளை நடுவது உடனடியாக சுற்றுச்சூழலை மீட்டெடுக்காது என்பதே நிதர்சனம். AI வளர்ச்சி அதிவேகமாக இருந்தாலும், அது இயற்கையைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உலக நாடுகளுக்கு உணர்த்துகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions