TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தைவானை துவம்சம் செய்த சாம்பி புயல்: முடங்கியது இயல்பு வாழ்க்கை

Share This Article:

தைவானை தாக்கிய சாம்பி புயலின் கோரத்தாண்டவம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதன் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த சுருக்கமான தகவல்.

தைவானை துவம்சம் செய்த சாம்பி புயல்: முடங்கியது இயல்பு வாழ்க்கை

தைவான் நாட்டை 'சாம்பி' என்ற அதிபயங்கர புயல் கடுமையாக தாக்கியுள்ளது. பசிபிக் கடலில் உருவான இந்த புயல், மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடனும், கொட்டித்தீர்த்த கனமழையுடனும் தைவானை புரட்டிப்போட்டது. கடலில் எழுந்த ராட்சத அலைகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த புயலின் கோரத்தாண்டவத்தால் தைவான் எங்கும் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சூறாவளி காற்றால் சுமார் 56,000 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி 5,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Content image

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவான் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது நிலைமை சற்று சீரடைந்து 259 விமானங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் மத்திய தைவானில் கடைகள் அடைக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த சாம்பி புயல், தற்போது சீனா மற்றும் ஜப்பான் நாடுகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. தைவானில் இன்றும் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions