TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கே.என்.நேரு தொடர்பான ரூ.634 கோடி ஊழல் புகார்: சீரியல் நடிகைகள் ஜனனி, ஷபானா பெயர்கள் அடிபடுவது ஏன்?

Share This Article:

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான ரூ.634 கோடி பணியிட நியமன முறைகேடு புகாரில் சின்னத்திரை நடிகைகள் ஜனனி அசோக்குமார் மற்றும் ஷபானா பெயர்கள் அடிபட்டுள்ளன. நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் சென்றதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை ஜனனி தனது Instagram பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதன் பின்னணி என்ன? முழு விவரம்.

கே.என்.நேரு தொடர்பான ரூ.634 கோடி ஊழல் புகார்: சீரியல் நடிகைகள் ஜனனி, ஷபானா பெயர்கள் அடிபடுவது ஏன்?

தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரூ.634 கோடி பணியிட நியமன முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக திருச்சி, சென்னை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளில் 170 ஆவணங்கள், 13 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ECR-ல் துணிக்கடை, ஸ்வீட் கடை, ஹோட்டல்... கமிஷன் பணத்தில் முதலீடா?

சென்னை மாநகராட்சி டெண்டர்கள் மூலமாகப் பெருமளவில் பணம் சம்பாதிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் கமிஷன் பணம் ECR பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.குறிப்பாக, ECR பகுதியில் துணிக்கடைகள், ஸ்வீட் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து, அதன் மூலம் பெருமளவில் வருமானம் ஈட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தில்தான் தற்போது சின்னத்திரை நடிகைகளின் பெயர்களும் அடிபடுவதால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. அதாவது, சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகள் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் உதவியாளர் கவிபிரசாத் மற்றும் செல்வமணி ஆகியோர் மூலமாகப் பல்வேறு தொகைகள் நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமார், 'செம்பருத்தி' தொடர் புகழ் ஷபானா உள்ளிட்ட சில நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு இந்தப் பணம் அனுப்பப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பணம் வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

மேலும், இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வலுக்கும் கோரிக்கை!

ஜனனி அசோக்குமார், ஷபானா உள்ளிட்ட நடிகைகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள் ஏதேனும் நடைபெற்றுள்ளனவா என்பதையும், கே.என்.நேரு தொடர்பான ரூ.634 கோடி முறைகேடு வழக்கில் இவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த ஜனனி அசோக்குமார்?

இதற்கிடையே, ஜனனி அசோக்குமார் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக்குமார். ‘மாப்பிள்ளை’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘செம்பருத்தி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

தொடர்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கிய ஜனனி, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

சின்னத்திரையில் அறிமுகமான ஜனனியின் பெயர், தற்போது ரூ.634 கோடி முறைகேடு புகார் தொடர்பான விவாதத்தில் இடம்பெற்றிருப்பதுதான் இந்தச் வழக்க்ன் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல், 'செம்பருத்தி' தொடரின் மூலம் ரசிகர்களிடம் தனி அடையாளம் பெற்றவர் ஷபானா. இவருக்கு இப்போதும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இத்தகையச் சூழலில் இவரது பேரும் இந்த ஊழல் வழக்கில் இடம்பெற்றிபதாக வெளியாகி இருக்கும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இப்படி,சின்னத்திரை நடிகைகளின் பெயர்கள் ரூ.634 கோடி ஊழல் புகாருடன் இணைத்துப் பேசப்படுவது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உண்மை இருக்கிறதா? வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டால் மேலும் யார் யாருடைய பெயர்கள் வெளிவரும்? என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி.







0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions