TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

படத்தில் ஹீரோ.. நிஜத்தில்? பாலத்துக்கு அடியில் தவெகவினரைத் தான் கட்டிவைக்க வேண்டும்!" - கனிமொழி விளாசல்

Share This Article:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை எனக் கூறி தவெக அரசை எதிர்த்து நடைபெற்ற திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில், தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைச் சுட்டிக்காட்டி கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார்.

படத்தில் ஹீரோ.. நிஜத்தில்? பாலத்துக்கு அடியில் தவெகவினரைத் தான் கட்டிவைக்க வேண்டும்!" - கனிமொழி விளாசல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "தெரியாமல் ஓட்டு போட்டுவிட்டோம், தப்பாகிவிட்டது" எனத் தமிழ்நாட்டுப் பெண்கள் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதைய அவல நிலையைக் கண்டு பெண்கள் அனைவரும் ஒன்று கூடி வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டதால், மாநிலத்தில் நிச்சயம் வெகு விரைவில் ஒரு பெரிய மாற்றம் வரும் என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

Content image

திரையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போல் பேசிவிட்டு, நிஜத்தில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என அவர் குற்றம் சாட்டினார். திரைப்படங்களில் பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களைப் பாலத்துக்கு அடியில் கட்டித் தொங்கவிடுவேன் என வசனம் பேசியவர்கள், இன்று அதனை நிஜத்தில் செயல்படுத்த நினைத்தால், முதலில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள தங்களின் சொந்தக் கட்சிக்காரர்களைத்தான் (தவெக) கட்டிவைக்க வேண்டும் என்று கடுமையாகச் சாடினார். அந்த அளவுக்கு அக்கட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மலிந்துவிட்டதாக அவர் விமர்சித்தார்.

தவெக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து செய்து வரும் பல்வேறு குற்றங்களை அவர் மேடையில் பட்டியலிட்டார். சென்னையில் இரண்டரை வயதுக் குழந்தை மீதான வன்கொடுமை மற்றும் ஆர்.கே. நகரில் 11 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லை உள்ளிட்ட பல கொடூர சம்பவங்களில் அக்கட்சியின் நிர்வாகிகளே நேரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலை மற்றும் கட்சியில் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகூறி தூத்துக்குடி, சேலம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை போன்ற பல மாவட்டங்களில் அக்கட்சி நிர்வாகிகள் பெண்களை ஏமாற்றி வன்கொடுமை செய்துள்ளனர்.


Content image

சொந்தக் கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கே பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவங்களில் குற்றவாளிகளைக் காப்பாற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரே செயல்பட்டதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்தும் அவர் கடும் கவலை தெரிவித்தார்.

போதை மருந்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முழக்கமிட்டவர்களின் சொந்தக் கட்சியினரே 133 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சாவுடன் பிடிபட்டுள்ளனர் என்றும், அக்கட்சி நிர்வாகிகள் குட்கா, கஞ்சா கடத்தலைத் தங்கள் முழுநேரத் தொழிலாகவே வைத்துள்ளதாகவும் அவர் சாடினார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 700 கொலைகளும், பெண்களுக்கு எதிரான 400 வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ள நிலையில், காவல்துறை உண்மையான குற்றவாளிகளைத் தேடாமல், சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினர் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டுமே கண்காணித்து கைது செய்வதாகக் கூறி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions