TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தொடர் சரிவில் தமிழகப் பொருளாதாரம்: வெறும் 3% ஜிஎஸ்டி வளர்ச்சியால் தங்கம் தென்னரசு கண்டனம்!

Share This Article:

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கவலை தெரிவித்துள்ளார்

தொடர் சரிவில் தமிழகப் பொருளாதாரம்: வெறும் 3% ஜிஎஸ்டி வளர்ச்சியால் தங்கம் தென்னரசு கண்டனம்!

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தற்போது ஜிஎஸ்டி வரி வருவாயில் கடும் சரிவைச் சந்தித்து வருவது பேசுபொருளாகியுள்ளது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாடு வெறும் 3 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆளும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்தியா முழுவதும் அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 16 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது.

அண்டை மாநிலங்களான ஆந்திரா 24%, கேரளா 23%, கர்நாடகா 18%, மற்றும் தெலங்கானா 14% என இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், 2025 அக்டோபரில் ரூ.11,298 கோடியாக இருந்த தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய், 2026 அக்டோபரில் ரூ.11,661 கோடியாக மட்டுமே (3% வளர்ச்சி) அதிகரித்துள்ளது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Content image

தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கியப் பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால் மட்டுமே மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்படுவதாக தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியுள்ளார். அதேசமயம், மாநிலத்தின் சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருவது, மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையைக் காட்டுவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தைச் சீரமைக்க, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டுமே அரசு நம்பியிருக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். மாறாக, மாநிலத்தின் சொந்த உற்பத்தியினைப் பெருக்கி, வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என தங்கம் தென்னரசு ஆலோசனை வழங்கியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions