TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Share This Article:

துல்கர் சல்மான் நடிப்பில் நஹாஸ் ஹிதாயத் இயக்கிய ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு!

''துல்கர் சல்மான்"நடிப்பில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘ஐ ஆம் கேம்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிரடி ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நட்சத்திரப் பட்டாளம்

‘ஐ ஆம் கேம்’ திரைப்படத்தில் துல்கர் சல்மான், 'கயாடு லோஹர்', கதிர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின்,' சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Content image

₹50 கோடி வசூல்

'சூதாட்டத்தை' மையமாகக் கொண்டு திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும், படத்தின் கதைக்களம் மற்றும் வித்தியாசமான கற்பனை அம்சங்கள் ரசிகர்களிடையே பேசப்பட்டன.

நவம்பர் 6-ல் ஓடிடி வெளியீடு

இந்நிலையில், ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதனால் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்கள் ஓடிடியில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions