TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

400 டன் வெங்காயம் மாயம்: தவெக அரசின் மெத்தனப் போக்கிற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

Share This Article:

வெளிச்சந்தையில் வெங்காய விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு விநியோகிக்கக் கொண்டுவரப்பட்ட 250 டன் வெங்காயம் அழுகி வீணாகியுள்ளதாகவும், NAFED மூலம் கொண்டுவரப்பட்ட 400 டன்னுக்கும் அதிகமான வெங்காயம் மாயமாகியுள்ளதாகவும் கூறி தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

400 டன் வெங்காயம் மாயம்: தவெக அரசின் மெத்தனப் போக்கிற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, வட மாநிலங்களில் இருந்து வெங்காயத்தைக் கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருந்தது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அரசின் இந்த அறிவிப்பு வெறும் வார்த்தை ஜாலமாகவே முடிந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளன.

கடந்த வாரம் வட மாநிலங்களில் இருந்து சுமார் 250 டன் வெங்காயம் சரக்கு ரயில் மூலமாக சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது. கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக இவை 10 லாரிகளில் ஏற்றப்பட்டன. ஆனால், கடந்த 3 நாட்களாக லாரிகளில் இருந்து வெங்காயம் கீழே இறக்கப்படாமல் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதால், 250 டன் வெங்காயமும் முற்றிலும் அழுகி வீணாகியுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Content image

இது ஒருபுறமிருக்க, NAFED மூலம் நான்காம் கட்டமாக 450 டன் வெங்காயம் தமிழகத்திற்கு கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்டது. இந்த வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தமிழக அரசு தெரிவிக்கிறது. ஆனால், தமிழக அரசிடமிருந்து தங்களுக்கு எவ்வித சரக்கும் திருப்பி அனுப்பப்படவில்லை என்று NAFED தரப்பில் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்திற்கு வந்த 400 டன்னுக்கும் மேலான அந்த வெங்காயம் எங்கே சென்றது எனத் தெரியாமல் மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இது என்ன சினிமாவா, டேக் சரியில்லை என்றால் கட் சொல்லிவிட்டு அடுத்த டேக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? மக்கள் நலன் மற்றும் வரிப்பணம் சம்பந்தப்பட்ட அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்று கூடத் தெரியாமல் தவெக அரசு திணறுகிறது. விலையேற்றத்தின் தீவிரம் புரியாமல் மெத்தனமாகச் செயல்படும் இந்த அரசு, உடனடியாக விலைவாசியைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions