TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ திரைப்படம் – வெளியான ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Share This Article:

நடிகர் சந்தானம் நடிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜாம்பி மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ திரைப்படம் – வெளியான ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை,

நடிகர் "சந்தானம்" கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

கதாநாயகனாக கலக்கும் சந்தானம்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாகப் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Content image

ஜாம்பி கதையில் உருவாகும் ‘லவ் பைட்’

"சந்தானம்"தற்போது அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் பைட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜாம்பி கதையை மையமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் திகில் கலந்த பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் "அபர்ணா தாஸ்" கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஃபாக்ஸன் இசையமைத்துள்ளார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

நிறைவடைந்த படப்பிடிப்பு

கடந்த மே மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனைப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

டிசம்பர் 18-ல் திரையரங்குகளில் வெளியீடு

இந்நிலையில், இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 'டிசம்பர் 18-ஆம்' தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சந்தானத்தின் நகைச்சுவையுடன் ஜாம்பி கதைக்களமும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions