TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கேரளாவுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்போது தவெக அரசுக்கு சாத்தியமில்லாதது ஏன்? - மெகா ஊழல் என மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

Share This Article:

தவெக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கேரள அரசு குறைந்த விலைக்கு வாங்கும் போது, தமிழகத்தில் ஏன் இவ்வளவு அதிக விலைக்கு வாங்கப்படுகிறது என அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்போது தவெக அரசுக்கு சாத்தியமில்லாதது ஏன்? - மெகா ஊழல் என மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தவெக அரசின் மின்சாரக் கொள்முதல் விலை குறித்து வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். மின் பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது அரசின் தவறான நிர்வாகத்தையே காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

தவெக அரசில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய் மற்றும் 41.50 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில், அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு யூனிட் மின்சாரம் 14.50 மற்றும் 12.50 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த விலைக்கு வாங்கியதே அதிக விலை என அங்கு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மேலும், ஒரு தனியார் நிறுவனம் கேரள அரசுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை 8.645 ரூபாய்க்கு வழங்க முன்வந்தும், அதனைப் புறக்கணித்த விவகாரத்தில் கேரள மின்வாரியத் தலைவரே அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Content image

இந்த விலைப்பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்துள்ள மு.க.ஸ்டாலின், தவெக அரசு மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 8.645 ரூபாய், 12.50 ரூபாய் அல்லது 14.50 ரூபாய் என மிகக்குறைந்த விலைகளில் கேரள மாநிலத்திற்கு மின்சாரம் கிடைக்கிறது என்றால், தவெக அரசுக்கு மட்டும் ஏன் அந்த விலையில் மின்சாரம் வாங்குவது சாத்தியமில்லாமல் போனது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் பின்னணியில் மிகப் பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இந்த மின்சாரக் கொள்முதல் விவகாரத்தில் எவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருவதால், அவர்கள் விசாரித்தால் முழுமையான உண்மைகள் வெளிவராது என்றும், எனவே முற்றிலும் சுதந்திரமான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு தனி ஆணையம் அமைத்து இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions