ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா!
ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளார். இதற்கான அறிமுக வீடியோவை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை "ஸ்ரீலீலா" இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய "அஸ்வத் மாரிமுத்து" இப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
நயன்தாராவை தொடர்ந்து இணைந்த ஸ்ரீலீலா
இதற்கிடையில், இப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகப் படக்குழு ஏற்கனவே கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், தற்போது மற்றொரு பிரபல நடிகையான ஸ்ரீலீலாவும் ‘தர்மன்’ படத்தில் இணைந்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழு, ஸ்ரீலீலாவின் அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த், நயன்தாரா, ஸ்ரீலீலா என நட்சத்திரப் பட்டாளம் இணைந்துள்ளதால் ‘தர்மன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது
3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புகைப்படங்களைப் பகிர்ந்து அறிவித்திருந்தார். தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

0 Comments
No comments yet. Be the first to comment.