TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தீபாவளிப் பயணம்: 15,659 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம் – அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

Share This Article:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க கட்டணமில்லா எண்களும், கிளாம்பாக்கத்தில் சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிப் பயணம்: 15,659 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம் – அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

தீபாவளி பண்டிகை வருகிற 8-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றி செல்ல விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பண்டிகைக்காக 15,901 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக, இன்று (5-ஆம் தேதி) முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு, வழக்கமான 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Content image

இதில் 1,659 தனியார் ஒப்பந்தப் பேருந்துகளும் அடங்கும். அதேபோல, பண்டிகை முடிந்து மக்கள் சென்னை திரும்ப வசதியாக, 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து 4,382 வழக்கமான பேருந்துகளுடன் 6,815 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காகக் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் சிறப்புக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆயுதபூஜையின் போது மழை காரணமாக ஏற்பட்ட சேறும் சகதியுமான நிலையைத் தவிர்க்க, இம்முறை ஒன்றரை அடி உயரத்திற்கு மரப்பலகைகளால் ஆன நடைமேடை வசதி மற்றும் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கிளாம்பாக்கத்தில் செல்போன் சிக்னல் தடையின்றி கிடைக்க 2 அல்லது 3 தற்காலிக சிக்னல் பூஸ்டர் டவர்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Content image

பண்டிகைக் கால நெரிசலைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அதிக கட்டணம் வசூலித்த 10 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல்களை அறியவும், அரசுப் பேருந்துகள் தொடர்பான குறைகளைப் பதிவு செய்யவும் 94450 14436 என்ற எண்ணையும், 149 என்ற கட்டணமில்லா எண்ணையும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணிலோ அல்லது 93848 08333 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலோ பயணிகள் புகார் அளிக்கலாம். பயணிகளின் உதவிக்காகக் கிளாம்பாக்கத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையும், ‘மே ஐ ஹெல்ப் யூ’ தகவல் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions