உலக அரங்கில் கவனத்தை ஈர்த்த தமிழக தேர்தல் முடிவுகள்: விஜய்யின் வெற்றியை வியந்து பாராட்டும் சர்வதேச ஊடகங்கள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது வெற்றி குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் தொகுப்பு.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அவை இந்திய அளவில் மட்டுமின்றி உலக அரங்கிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னனி ஊடகங்கள் தமிழகத்தின் இந்த அரசியல் மாற்றத்தை முக்கியச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.
வங்கதேசத்தின் முன்னணி பத்திரிகையான டாக்கா ட்ரிப்யூன், தமிழகத் தேர்தல் குறித்து ஒரு முக்கியக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், மூத்த அரசியல்வாதியான மு.க.ஸ்டாலினை அதிகம் அறியப்படாத ஒரு போட்டியாளர் தோற்கடித்தது தமிழக அரசியலில் ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஆளும் திமுக-வை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி புதிய கட்சி முதலிடம் பிடித்தது ஒரு வரலாற்று மாற்றம் எனவும் அந்த இதழ் விவரித்துள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற நாளிதழான நியூயார்க் டைம்ஸ், நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றியைப் பிரதானப்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த எதிர்பாராத வெற்றியை 'இன்றைய நாளின் மிகப்பெரிய ஆச்சரியம்' என அந்தத் தினசரி வர்ணித்துள்ளது. ஒரு திரை நட்சத்திரம் மிகக்குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதைச் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், வரவிருக்கும் காலங்களில் அம்மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் கொள்கைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து உலகளாவிய ரீதியில் விவாதங்கள் தொடங்கியுள்ளன.

0 Comments
No comments yet. Be the first to comment.