கேன்ஸ் 2026 திரையுலக விழாவில் 'க்ளப் எல் லண்டன்' உடையில் தேவதையாய் மின்னிய அதிதி ராவ் ஹைதரி! வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல தமிழ் இயக்குனர் மணிரத்னத்தின் 'காற்று வெளியிட', 'செக்கச் சிவந்த வானம்' போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளையடித்த நடிகை அதிதி ராவ் ஹைதரி, தற்போது 79வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் (Cannes 2026) தனது அசத்தலான மாடர்ன் உடையில் கலந்துகொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' மற்றும் 'செக்கச் சிவந்த வானம்' போன்ற மாபெரும் வெற்றித் திரைப்படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், தெலுங்கு, ஹிந்தி மற்றும் வெப் சீரிஸ் என பிற மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து அசத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகர் சித்தார்த்தை காதலித்து கரம் பிடித்தார் அதிதி. இந்நிலையில், உலகப் பிரசித்தி பெற்ற பிரான்ஸ் நாட்டின் 'கேன்ஸ் 2026' (Cannes Film Festival) சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை தட்டிப்படைத்து வருகிறார்.
ஃபேஷன் ஸ்டேட்மென்ட் மற்றும் ஆடை விவரங்கள்
ஒவ்வொரு வருடமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நட்சத்திரங்களின் ஆடை வடிவமைப்பு உலக அளவில் உற்று நோக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் கேன்ஸ் விழாவின் ரெட் கார்ப்பெட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் அதிதி ராவ், முற்றிலும் ஒரு மாடர்ன் மற்றும் கவர்ச்சியான தேவதையைப் போல காட்சியளிக்கிறார். பிரபல ஆடை வடிவமைப்பான 'க்ளப் எல் லண்டன்' (Club L London) பிராண்டின் பிரத்யேக கிரீம் நிற மிடி (Cream Midi Dress) ஆடையில் அவர் தோன்றி, பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்சு ரிவியரா பின்னணியில் நடத்திய புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. பிரபல ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் சனம் ரத்தன்சி இந்த அழகிய தோற்றத்தை அவருக்கு வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண வாழ்க்கை மற்றும் திரைப்பயணம்
நடிகர் சித்தார்த்தை அதிதி ராவ் காதலித்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டது நமக்குத் தெரிந்ததே. திருமணத்திற்கு பிறகும் தனது கலைப்பயணத்தை தொய்வில்லாமல் தொடர்ந்து வரும் அதிதி, அண்மையில் வெளியான மௌனத் திரைப்படமான 'காந்தி டாக்ஸ்' (Gandhi Talks) படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் சிறிய இடைவெளி விழுந்திருந்தாலும், கேன்ஸ் போன்ற உலகளாவிய மேடைகளில் தொடர்ந்து கம்பீரமாகத் தோன்றி, தமிழ் ரசிகர்களின் வாழ்த்துகளையும், லைக்குகளையும் அள்ளி வருகிறார் இந்த பேரழகி.

0 Comments
No comments yet. Be the first to comment.