TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மேற்கு வங்கத்தில் அதிரடி: மதரஸாக்கள் உட்பட அனைத்துக் கல்விக்கூடங்களிலும் 'வந்தே மாதரம்' கட்டாயம்! அரசு உத்தரவு!

Share This Article:

மேற்கு வங்காளத்தில் உள்ள மதரஸாக்கள் (இஸ்லாமியக் கல்விக்கூடங்கள்) உட்பட அனைத்து அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாகப் பாட வேண்டும் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அதிரடி: மதரஸாக்கள் உட்பட அனைத்துக் கல்விக்கூடங்களிலும் 'வந்தே மாதரம்' கட்டாயம்! அரசு உத்தரவு!

அரசாணையின் முக்கிய விவரங்கள்:

முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான மேற்கு வங்க அரசு கடந்த வாரம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயமாக்கிய நிலையில், தற்போது அந்த உத்தரவு மதரஸாக்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • அனைத்து மதரஸாக்களுக்கும் பொருந்தும: மேற்கு வங்க சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மாடல் மதரஸாக்கள், அரசு உதவி பெறும் மதரஸாக்கள், அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறாத மதரஸாக்கள் மற்றும் சிசு சிக்ஷா கேந்திராக்கள் ஆகிய அனைத்திற்கும் இந்த உத்தரவு உடனடியாகப் பொருந்தும்.
  • காலை வழிபாட்டுப் பாடல்: தினசரி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் (Morning Assembly Prayers), மாணவர்கள் அனைவரும் 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதைக் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என மதரஸா கல்வி இயக்ககம் (Directorate of Madrasah Education) உத்தரவிட்டுள்ளது.
  • நோக்கம்: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறையைக் கொண்டு வரவும், மாணவர்களிடையே தேசபக்தியை வளர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) அரசு கொண்டு வந்திருந்த 'பங்களார் மாட்டி பங்களார் ஜொல்' என்ற மாநிலப் பாடலுக்குப் பதிலாக, தற்போது 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions