"என்னை விஷம் வச்சு கொன்னுடுங்க!" முன்னாள் மனைவியால் மிரட்டல்? - வீரம் பட நடிகர் பாலா கண்ணீர் பேட்டி!
"என்னால் இனி இந்த சித்திரவதையை தாங்க முடியாது, எங்களை விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்" என நடிகர் பாலா தனது முன்னாள் மனைவி மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்ணீருடன் பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும், அஜித் நடித்த 'வீரம்' படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமானவருமான நடிகர் பாலா, தற்போது தனது குடும்பப் பிரச்சினை காரணமாக மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அவர் கோகிலா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், தனது முன்னாள் மனைவி அம்ரிதா சுரேஷ் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக பாலா கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.
120 கோடி ரூபாய் கேட்கிறார்கள்!
கடந்த 2010-ஆம் ஆண்டு பிரபல பின்னணி பாடகி அம்ரிதாவை பாலா திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2019-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தனது தற்போதைய நிலை குறித்துப் பேசிய பாலா,
"தற்போது என்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாயை எனது மகளின் பெயரில் ஃபிக்சட் டெபாசிட் (FD) செய்துவிட்டேன். ஆனால், எனது முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது என்னிடம் 120 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.
விஷம் வைத்து கொன்றுவிடுங்கள் - பாலா ஆதங்கம்
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இத்தனை நாட்களாக எனக்குள் இருந்த எல்லா வலிகளையும், பிரச்சினைகளையும் உள்ளேயே பூட்டி வைத்திருந்தேன். ஆனால், இனிமேலும் யாராவது என்னைப் பற்றி தவறாகப் பேசினால், நான் அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களுடன் பிரெஸ் மீட் வைத்து உடைப்பேன்.
நான் சொல்ல வரும் உண்மைகள் வெளியே வரக்கூடாது என்று அவர்கள் நினைத்தால், பேசாமல் என்னையும், என் தற்போதைய மனைவியையும் விஷம் வைத்துக் கொன்றுவிடுங்கள்" என மிகுந்த மனவேதனையுடன் கண்ணீர் விட்டுப் பேசியுள்ளார். நடிகர் பாலாவின் இந்த உருக்கமான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.