திரும்பிப் பார்க்க வைத்த ‘Gen Z’ – கழிவுகளை தனி ஆளாக சுத்தம் செய்யும் 20 வயது இளைஞர்!
மத்தியப் பிரதேசத்தில் அஜ்னார் நதியில் உள்ள குப்பைகளை தனி ஆளாக சுத்தம் செய்து வரும் 20 வயது சுரேந்திர சிங் என்ற Gen Z இளைஞரின் முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் (ம.பி.) அஜ்னார் நதியில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை தனி ஆளாக சுத்தம் செய்து, அசத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் 20 வயதான சுரேந்திர சிங் என்ற Gen Z இளைஞர்.
இதற்காக முதலில் மெழுகுவர்த்தி உருவாக்க நினைத்ததாகவும், பணம் இல்லாததால் வெறும் கைகளால் சுத்தம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது முயற்சியில் ஈடுபட்டு வரும் சுரேந்திர சிங், தனது செயல்பாடுகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துக்காட்டி வருகிறார்.
“ஆரம்பத்தில் என்னை பைத்தியம் என கிண்டலடித்து, அவர்களின் கழிவுகளை நான் சுத்தம் செய்வதாகவும் கூறினர். அவர்களுக்கு என் செயலில் பதில்” என அவர் தெரிவித்துள்ளார்.
சுயநலமின்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்த 20 வயது இளைஞரின் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.