TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

‘பவி டீச்சர்’ பிரிகிடாவுக்கு திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள்!

Share This Article:

‘பவி டீச்சர்’ பிரிகிடாவுக்கு திருமணம்! நடிகர் ஆனந்த் ராமை காதலித்து வந்த பிரிகிடா, தற்போது அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘பவி டீச்சர்’ பிரிகிடாவுக்கு திருமணம்... வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னை:

நடிகை பிரிகிடா-நடிகர் ஆனந்த் ராம் தம்பதியினரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘ஆஹா கல்யாணம்’ வெப் சீரிஸில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா. இதனைத் தொடர்ந்து ‘அயோக்யா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும், ‘வாமா மாஸ்டர்’, ‘வேலன்’, ‘இரavin நிழல்’, ‘கருடன்’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, ‘மார்கன்’, ‘இட்லி கடை’, ‘ஹாட் ஸ்பாட் 2’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ படத்திலும் பிரிகிடா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையும் பெற்றுள்ளார்.

காதலை வெளிப்படுத்திய பிரிகிடா

இதற்கிடையே, ‘மீசைய முறுக்கு’, ‘நண்பன் ஒருவன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆனந்த் ராமை பிரிகிடா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனந்த் ராமின் பிறந்தநாளன்று சமூக வலைதளப் பதிவு மூலம் தனது காதலை பிரிகிடா வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், நீண்டகாலமாக காதலித்து வந்த இருவரும் கடந்த ஜூலை மாதம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

Content image

திருமணம் செய்து கொண்ட பிரிகிடா

தற்போது பிரிகிடா மற்றும் ஆனந்த் ராம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமண புகைப்படங்களை பிரிகிடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்! எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆசிகளுக்கும் நன்றி. நெடுஞ்சியில் தினைக்கிறோம்” என அவர் பதிவிட்டுள்ளார்.

திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பிரிகிடாவின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions