TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மரியாதை!

Share This Article:

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் உருவப்படத்திற்கும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர், தி.மு.க தொண்டர்களுடன் இணைந்து சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.

பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மரியாதை!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்: சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் இன்று தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா மற்றும் சமூகநீதி நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகே அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அண்ணா சாலையில் மாலை அணிவித்து மரியாதை:

சமீபத்தில் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பெரியாரின் பிறந்தநாளையொட்டி இன்று காலை சென்னை அண்ணா சாலைக்கு நேரில் வருகை தந்தார். அங்கு அமைந்துள்ள பெரியாரின் பிரம்மாண்ட சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும், சிலைக்கு மாலை அணிவித்தும் அவர் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு பெரியாருக்கு தங்களது புகழஞ்சலியைச் செலுத்தினர்.


Content image

அறிவாலயத்தில் மலரஞ்சலி மற்றும் சமூகநீதி நாள் உறுதிமொழி:

அண்ணா சாலை நிகழ்வைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தனர். அங்கு சிறப்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் கூடியிருந்த தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி அங்கிருந்த அனைவரும் பின்மொழிந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சமூகநீதி நாள் உறுதிமொழி வாசகம்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்" எனத் தொடங்கும் சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான உறுதிமொழியைத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உணர்வுப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர்.




0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions