TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 2026: ஏப்ரல் 19-ல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் - முழு விவரங்கள்!

Share This Article:

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த வைபவத்தைக் காண விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட் முன்பதிவு வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி காலை தொடங்குகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 2026: ஏப்ரல் 19-ல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் - முழு விவரங்கள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த வைபவத்தைக் காண விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட் முன்பதிவு வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி காலை தொடங்குகிறது.

முன்பதிவு மற்றும் கட்டண விவரங்கள்: திருக்கல்யாணத்தை நேரில் தரிசிக்க ரூ.200 மற்றும் ரூ.500 ஆகிய இரண்டு விலைகளில் கட்டணச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவை வரும் ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 9 மணி வரை கீழ்க்கண்ட இணையதளங்களில் மேற்கொள்ளலாம்:

  1. maduraimeenakshi.hrce.tn.gov.in
  2. hrce.tn.gov.in

முக்கிய விதிமுறைகள்:

  • ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.500 டிக்கெட் 2 அல்லது ரூ.200 டிக்கெட் 3 மட்டுமே பதிவு செய்ய முடியும் (இரண்டு விலைகளிலும் மாற்றி பதிவு செய்ய இயலாது).
  • ஆன்லைன் தவிர, எல்லீஸ் நகரில் உள்ள யாத்ரி நிவாஸ் விடுதியிலும் நேரடியாக முன்பதிவு செய்யலாம்.
  • முன்பதிவு செய்தவர்களில் கூடுதல் விண்ணப்பங்கள் இருந்தால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஏப்ரல் 23-ல் தகவல் தெரிவிக்கப்படும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏப்ரல் 24 முதல் 27 வரை யாத்ரி நிவாஸில் பணம் செலுத்தி டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

திருக்கல்யாண நேரமும் இடமும்: திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 28-ஆம் தேதி காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் கோவிலின் வடக்கு மற்றும் மேற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும். டிக்கெட் பெற்றவர்கள் அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர வேண்டும். கட்டணமில்லா தரிசனத்திற்கு வருபவர்கள் தெற்கு கோபுரம் வழியாக 'முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions