காதல் சொல்ல வந்தேன்', 'பட்டத்து யானை' போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான கார்த்திக் சபேஷ் (37) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். தேவா மற்றும் சபேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த மரணங்களை தொடர்ந்து, சபேஷின் மகனான கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருப்பது தேவா குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீர் காயுறதுக்குள்ள அடுத்த மரணம்... ஏற்கனவே சபேஷ், தேவா-னு அடுத்தடுத்து நடந்த இழப்புகளோட வலியே அந்த குடும்பத்துக்கு இன்னும் தீரல, அதுக்குள்ள இப்போ இன்னொரு பெரிய இடி. திரையில எப்பவுமே நம்மள வயிறு குலுங்க சிரிக்க வைக்கிற நடிகர் கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால சென்னையில காலம் ஆகி இருக்காரு.
தமிழ் சினிமாவுல ஹீரோவுக்கு நண்பனா வந்து, தன்னோட காமெடியால ரசிகர்களை சிரிக்க வச்ச பல நடிகர்கள்ல ஒருத்தர் கார்த்திக் சபேஷ். 100-க்கும் மேற்பட்ட படங்கள்ல நடிச்சு, தமிழ் சினிமாவுல தனக்கென ஒரு இடத்தைப் பிடிச்சிருந்தார்.
கார்த்திக் சபேஷ்னு சொன்னதுமே பலருக்கும் முதல்ல ஞாபகம் வர்றது காதல் சொல்ல வந்தேன் படம்தான். அந்தப் படத்துல ஹீரோ கூட சேர்ந்து இவர் பண்ற காமெடியும், காலேஜ்ல ரெண்டு பேரும் அடிக்கிற லூட்டியும் அவ்வளவு ஜாலியா இருக்கும். அந்தக் காட்சிகளை இப்போ பார்த்தாலும் சிரிக்காம இருக்க முடியாது.
அதேமாதிரி, பட்டத்து யானை படத்துல சந்தானத்தோட சேர்ந்து இவர் பண்ற “எதுக்கு டா பக்கெட்ல தண்ணி” காமெடியும் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிச்ச ஒன்று. அந்தக் காமெடி காட்சிகளை இன்னைக்கும் யூடியூப் காமெடி சேனல்கள்ல பார்த்து ரசிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க.
தமிழ்ப்படம், வல்லவன், பர்மா போன்ற பல படங்கள்ல நடிச்சிருக்காரு. வெறும் காமெடி மட்டும் இல்லாம, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற குணச்சித்திரக் கதாபாத்திரங்கள்லயும் நடிச்சு நல்ல பெயர் வாங்கியிருக்காரு.
ஹீரோவா நடிச்சாத்தான் மக்கள் மனசுல இடம்பிடிக்க முடியும்னு இல்ல. சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சாலும், தன்னோட நடிப்பால மக்களைச் சிரிக்க வைக்கவும் அவங்க மனசுல இடம்பிடிக்கவும் முடியும்னு நிரூபிச்சவர் கார்த்திக் சபேஷ்.
கடந்த சில காலமாவே தேவா குடும்பத்துல அடுத்தடுத்து துயரமான சம்பவங்கள் நடந்துட்டு வருது. முதல்ல தேவாவோட சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷின் மறைவு. அதற்குப் பிறகு இசையமைப்பாளர் தேவாவின் மறைவு. இப்போ சபேஷின் மகன் கார்த்திக் சபேஷும் மறைந்திருப்பது அந்தக் குடும்பத்துக்கு இன்னொரு பெரிய இழப்பா அமைஞ்சிருக்கு.
கார்த்திக் சபேஷுக்கு மனைவி ரம்யா கார்த்திக், இரண்டு மகள்கள் இருக்காங்க. அவரோட மறைவு குடும்பத்தினருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கு.
இவரோட மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவிச்சுட்டு வராங்க.இனி காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை படங்களோட காட்சிகளைப் பார்க்கும்போதெல்லாம், இனி இவர் நம்மகூட இல்ல என்ற ஏக்கம் இருக்க தான் செய்யும். ரசிகர்களைச் சிரிக்க வச்ச அந்தக் கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி!

0 Comments
No comments yet. Be the first to comment.