TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகை? தமிழ்நாடு அரசு தீவிர பரிசீலனை

Share This Article:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வழங்கப்படும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகையை நவம்பர் முதல் வாரத்திலேயே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.

நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத்தொகை? தமிழ்நாடு அரசு தீவிர பரிசீலனை


சென்னை:

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மிக முக்கிய நலத்திட்டங்களில் ஒன்று 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்'. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலம், தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் தொடர்ந்து பயன் அடைந்து வருகின்றனர்.

வழக்கமான நடைமுறை என்ன?

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ.1,000 தொகையானது, வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதியன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. சில சமயங்களில் 15-ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக இருந்தால், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே நிதி அனுப்பப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை முன்-ஏற்பாடு:

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. பண்டிகை நாட்களில் துணிமணிகள், இனிப்புகள் மற்றும் குடும்பத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குப் பொதுமக்களுக்குக் கூடுதல் நிதி தேவைப்படும்.

எனவே, ஏழை எளிய குடும்பப் பெண்களுக்குப் பண்டிகைச் செலவுகளுக்கு உதவும் வகையில், வழக்கமான 15-ஆம் தேதி வரை காத்திருக்காமல், நவம்பர் முதல் வாரத்திலேயே (1 முதல் 7-ஆம் தேதிக்குள்) உரிமைத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்க அரசு ஆலோசித்து வருகிறது

Content image

மாதத்தின் முதல் தேதியன்றே அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளம் வழக்கம் போல் வழங்கப்பட்டுவிடும். அதே கையோடு, நவம்பர் முதல் வாரத்திலேயே மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்து வழங்கிவிட்டால் பெண்கள் சிரமமின்றி பண்டிகையைக் கொண்டாட முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது.

இதற்கான தேவையான நிதிப் பங்கீடுகளை அரசு கருவூலத்திற்கு உடனடியாகக் கொண்டுவருவதற்கான கணக்கீடுகளும், நிர்வாக ரீதியிலான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்த நடைமுறை அரசின் தீவிரப் பரிசீலனையில் இருந்தாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல் வாரத்திலேயே வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகளே மிக அதிகமாக இருப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions