இந்தியாவிலேயே முதல்முறை: நயன்தாராவுக்கு 60 அடி பிரம்மாண்ட கட் அவுட்!
'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக நடிகை நயன்தாராவுக்கு 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 6-ம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.
இந்திய சினிமாவில் முதல்முறையாக ஒரு நடிகைக்கு 60 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக நயன்தாராவின் இந்த கட் அவுட் சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டதில்லை என படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய நிலையில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். நயன்தாராவுடன் ரெஜினா கேசண்ட்ரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்
சமீபத்தில் இந்த படத்தின் 'ரைஸ் ஆப் மஹாசக்தி' என்ற டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ம் தேதி 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.2005-ல் 'ஐயா' படம் மூலம் அறிமுகமாகி, தற்போது 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா வலம் வருகிறார். தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக முதல் இடத்தில் அவர் திகழ்கிறார். அடுத்ததாக இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாகவும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.