TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அஜித்தின் புதிய படத்திற்கு பூஜை: நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘டேர் டெவில்’!

Share This Article:

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுகிறது. இப்படத்தில் ஸ்ரீலீலா, பார்த்திபன், பிரபு, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அஜித்தின் புதிய படத்திற்கு பூஜை: நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘டேர் டெவில்’!

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான "அஜித்குமார்" நடிப்பில் உருவாகவுள்ள 64-வது திரைப்படம் ‘டேர் டெவில்’. இப்படத்தின் 'பூஜை' இன்று (நவம்பர் 2) சென்னையில் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நடிகர் அஜித்குமார், கடந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார். ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார், தனது பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Bravehearts Production) நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இதன் மூலம் ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்குகிறார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்

மீண்டும் சினிமாவுக்குத் திரும்பும் அஜித்!

கடந்த சில மாதங்களாக கார் பந்தயப் போட்டிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்த அஜித்குமார், தற்போது மீண்டும் திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

கார் பந்தயங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த அவர், தற்போது ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையில் தோன்றவிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன், அனிருத் எனப் பலரும் இணைந்துள்ள இந்தப் புதிய கூட்டணி தமிழ் சினிமாவில் மற்றுமொரு எதிர்பார்ப்புக்குரிய படைப்பாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Content image

நட்சத்திரப் பட்டாளத்துடன் ‘டேர் டெவில்’

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர்கள் பார்த்திபன், பிரபு மற்றும் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் இப்படத்தின் நடிகர்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். குறிப்பாக, அஜித்துடன் இணைந்து நடிக்கவிருப்பது குறித்து நடிகர் ''பார்த்திபன்'' தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று சென்னையில் நடைபெறும் படத்தின் பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு, நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், அஜித்துடன் இணைந்து திரையில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நவம்பர் 12-ல் தொடங்கும் படப்பிடிப்பு!

‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது படத்தின் பூஜை மட்டுமே இன்று சென்னையில் நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு நவம்பர் 12ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், மலேசியா மற்றும் பாங்காக் உள்ளிட்ட வெளிநாட்டு இடங்களிலும் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் முழுமையான படப்பிடிப்பு அட்டவணை மற்றும் கதைக்களம் குறித்த கூடுதல் விவரங்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்



0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions