TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சுயமரியாதை மரபும் சமஸ்கிருத மந்திரமும்: துரைமுருகன் இல்லத் திருமணத்தால் வெடித்த சர்ச்சை!

Share This Article:

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில், கழகத்தின் கொள்கையான சுயமரியாதை முறைக்கு மாறாக சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி திருமணம் நடைபெற்றது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுயமரியாதை மரபும் சமஸ்கிருத மந்திரமும்: துரைமுருகன் இல்லத் திருமணத்தால் வெடித்த சர்ச்சை!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், தீபக் ரவிக்கும் சென்னையில் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய திமுக தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். எனினும், இந்தத் திருமணம் நடைபெற்ற விதம் தற்போது பெரும் அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதமாக மாறியுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் காலம் காலமாக சுயமரியாதைத் திருமணங்களை வலியுறுத்தி வரும் இயக்கமாகும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்கள் மூலம் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு, வைதீக முறைப்படி சடங்குகள் நடைபெற்றன. இது திமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என சொந்த கட்சியினரும், திராவிட இயக்க ஆதரவாளர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Content image

திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் சுப. வீரபாண்டியன், தனது எக்ஸ் தளத்தில், "துரைமுருகன் இல்லத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டது தனது இதயத்தை வலிக்கச் செய்ததாக" வேதனை தெரிவித்துள்ளார். அதேபோல், முன்னாள் திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், "மேடைகளில் சுயமரியாதை திருமணங்களைப் பிரகடனப்படுத்தும் கழகத்தில், அதைச் செயல்படுத்தும் வாய்ப்பைத் தவறவிட்டதில் தனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை" என்று வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.

இந்த நிகழ்வு திமுகவின் கொள்கைப் பிடிப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகளும், பாஜகவினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கொள்கைகளை மேடைகளில் மட்டும் பேசாமல் வாழ்வியலிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற குரல்கள் திமுக ஆதரவாளர்கள் மத்தியிலேயே வலுக்கத் தொடங்கியுள்ளன. துரைமுருகன் போன்ற மூத்த தலைவரின் இல்லத்திலேயே இப்படி நடந்திருப்பது, திராவிட அரசியலில் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions