TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

2027 ஒருநாள் உலகக்கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள்!

Share This Article:

2027 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியைக் காண 84 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 34 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானத்தில் ஒரு இருக்கைக்கு 247 பேர் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

2027 ஒருநாள் உலகக்கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள்!

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு போட்டிக்காக மட்டும் இதுவரை 84 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது.

34 ஆயிரம் இருக்கைகள்… 84 லட்சம் விண்ணப்பங்கள்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி, 2027 அக்டோபர் 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள தி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இந்த மைதானத்தில் சுமார் 34 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அமர்ந்து போட்டியைப் பார்க்க முடியும். ஆனால், போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெற 84,00,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன்படி, ஒரு இருக்கைக்கு சுமார் 247 பேர் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

இறுதிப்போட்டிக்கும் அதிக வரவேற்பு!

இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப் போலவே உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நவம்பர் 21ஆம் தேதி அதே வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியைக் காண சுமார் 79 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.2027 உலகக்கோப்பைக்கான டிக்கெட் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, 193 நாடுகளைச் சேர்ந்த சுமார் 28 லட்சம் ரசிகர்கள் டிக்கெட் குலுக்கலில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 12 கோடிக்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

டிக்கெட் பெறுவது எப்படி?

ரசிகர்கள் ஐசிசி இணையதளத்தில் இலவசமாக டிக்கெட் குலுக்கலுக்குப் பதிவு செய்யலாம். அதிக விண்ணப்பங்கள் வரும் போட்டிகளுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை கிடையாது. தேர்வு செய்யப்படும் ரசிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும்.தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக்கோப்பைத் தொடர், 2027 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions