TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பறிபோகிறதா துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி? - பேத்தி கல்யாண சர்ச்சையும், வெடிக்கும் உட்கட்சி பூசலும்!

Share This Article:

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்கியது திராவிட இயக்கத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கட்சித் தலைமையுடன் பனிப்போர் நிலவி வரும் சூழலில், துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்படுமா என்ற பரபரப்பான கேள்வி திமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பறிபோகிறதா துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி? - பேத்தி கல்யாண சர்ச்சையும், வெடிக்கும் உட்கட்சி பூசலும்!

திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகனின் பேத்தி திருமண நிகழ்வு, தற்போது தமிழக அரசியலிலும் திமுகவுக்குள்ளும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் படங்களை அழைப்பிதழில் போட்டுவிட்டு, திருமணத்தை மட்டும் புரோகிதர்களைக் கொண்டு சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்க தடபுடலாக நடத்தியதே இந்த சர்ச்சைக்கு முழுக்காரணம்.

சுயமரியாதைத் திருமணங்களை வலியுறுத்தும் திமுகவின் கொள்கைக்கு முரணாக இது அமைந்துள்ளதால், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் தங்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே கட்சித் தலைமைக்கும் துரைமுருகனுக்கும் இடையே பல விவகாரங்களில் பனிப்போர் நிலவி வருகிறது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கியதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும், அதனை வெளிப்படையாகவே காட்டி வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, 4370 கோடி ரூபாய் ஆற்றுமணல் கொள்ளை விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டதும், அவரிடமிருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டு வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தகைய தொடர் நிகழ்வுகளால், கட்சி ரீதியான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது துரைமுருகனிடம் ஆலோசனை கேட்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெகுவாகக் குறைத்துக் கொண்டார்.

Content image

ஒரு பொதுச்செயலாளராக இருந்துகொண்டு தனது சொந்த மாவட்டத்திலேயே உட்கட்சிப் பூசல்களைத் தீர்க்க தவறியதும், வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகளை முழுமையாக ஒருங்கிணைத்து கட்சிக்கு லாபம் தேடித் தராததும் தலைமைக்கு அவர் மீதான அதிருப்தியை அதிகரித்தது. மேலும், வயது மூப்பு காரணமாக அவர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும், விடாப்பிடியாகத் தேர்தலில் நின்று பின்னடைவைச் சந்தித்தார்.

எனவே, உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் அவர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு ஆ. ராசா போன்ற இளைய தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும் என்பது பெரும்பாலான திமுக உடன்பிறப்புகளின் எண்ணமாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு கட்சியில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வரும் மு.க. ஸ்டாலின், இதுவரை துரைமுருகனின் பதவியில் மட்டும் கை வைக்காமல் தயக்கம் காட்டி வந்தார்.

ஆனால், திமுகவின் அடிப்படை கொள்கையான சுயமரியாதைக்கு எதிராகப் புரோகிதர்களை வைத்து திருமணம் நடத்திய விவகாரம், துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்கத் தலைமைக்கு ஒரு வலுவான காரணத்தைக் கொடுத்துள்ளது. இதனால், நீண்ட காலமாக இழுபறியில் இருந்த துரைமுருகனின் பொதுச்செயலாளர் பதவி விரைவில் பறிக்கப்படுமா அல்லது தலைமை அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions