TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ரூ.5000 கோடி மோசடி: தொழிலதிபர் பிரேம்குமாருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Share This Article:

கேரளாவில் ரூ.5000 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், தொழிலதிபர் பிரேம்குமாருக்கு சொந்தமான சென்னை மற்றும் கேரளாவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவப் பாதுகாப்புடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

ரூ.5000 கோடி மோசடி: தொழிலதிபர் பிரேம்குமாருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

கேரளாவில் 5000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பி.எல்.எம் (BLM) நிறுவனத்தின் தலைவருமான பிரேம்குமாருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவருக்கு தொடர்புடைய சென்னை மற்றும் கேரளாவில் உள்ள அலுவலகங்கள், வீடுகள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம், இந்த 5000 கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரேம்குமாரின் வீட்டிற்கு வந்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.பின்னர் அவரை விசாரணைக்காக கேரளா மாநிலம் கோழிக்கோடுக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை (Bail) வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை (Money Laundering) தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Content image

இந்த மெகா சோதனையில் 30-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் விருகம்பாக்கத்தில் உள்ள பிரேம்குமாரின் வீடு, கோயம்பேட்டில் உள்ள அவரது டிராவல்ஸ் நிறுவனம், வானகரம், திருமங்கலம் மற்றும் கொளத்தூரில் உள்ள அலுவலகங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதேபோல, கேரளா மாநிலத்தில் உள்ள அவரது நிறுவனங்களிலும் அதிகாரிகள் முக்கிய ஆவணங்களைத் தேடி சல்லடை போட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை பிரேம்குமாரின் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.அவரது வழக்கறிஞர்கள் தரப்பில், "5000 கோடி ரூபாய் மோசடி எதுவும் நடைபெறவில்லை; நிறுவனத்தில் வேலை பார்த்து மனக்கசப்பு காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட நவீன் என்ற முன்னாள் ஊழியர் பழிவாங்கும் நோக்கில் அளித்த பொய் புகாரின் அடிப்படையில்தான் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், "சோதனை முடிவில்தான் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் வேறு எந்தெந்த வழிகளில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்ற முழு விவரங்களும் தெரியவரும்; கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேலும் விரிவடையும்" என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions