TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகக் குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

Share This Article:

சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது. பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகக் குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நிர்வாகக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோயில் பொது தீட்சிதர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று அவசரமாக விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கோயிலின் நிர்வாகத்தைக் கவனிக்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன் தலைவராகவும், ஆர்.சுரேஷ்குமார் இணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.ராஜேந்திரன் மற்றும் பொது தீட்சிதர்கள், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர்கள் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். கோயில் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் சீரடையும் வரை இக்குழு செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Content image

இந்த நிர்வாகக் குழுவானது, கோயிலின் சொத்துக்கள், நிதிக்கணக்குகள், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் இதர நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. குறிப்பாக, ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்பது, வாடகை பாக்கிகளை வசூலிப்பது, கணக்குகளை முறையாகப் பராமரிப்பது மற்றும் பக்தர்களுக்கு சமமான தரிசன வாய்ப்பை ஏற்படுத்துவது ஆகியவை இக்குழுவின் முக்கியப் பணிகளாகக் கூறப்பட்டன. அதேநேரம், கோயிலின் அன்றாட பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய பொது தீட்சிதர்கள், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைக்கு இது எதிரானது என வாதிட்டனர். மேலும், 1951-ஆம் ஆண்டிலேயே தீட்சிதர்களின் நிர்வாக உரிமையை அங்கீகரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டினர். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions