மே 15 முதல் 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி; இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்த திட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி வரும் மே 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் மே 15-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரை 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 6 நாள் சுற்றுப்பயணத்தின் போது, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 முக்கிய நாடுகளுக்கு அடுத்தடுத்துப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, அந்தந்த நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்புகளின் போது, நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துதல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பல்வேறு முக்கியத் துறைகளில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.