TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"கோவிலில் அவமானப்படுத்தினாங்க.." இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் ஜெய்!

Share This Article:

கோவில்களில் சந்தித்த அவமானங்கள் குறித்தும், தான் இஸ்லாம் மதத்திற்கு மாற தூண்டுகோலாக இருந்த மசூதி அனுபவங்கள் குறித்தும் நடிகர் ஜெய் சமீபத்திய பேட்டியில் ஓப்பனாகப் பேசியுள்ளார்.

"கோவிலில் அவமானப்படுத்தினாங்க.." இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் ஜெய்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய். சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவில், மேடையிலேயே அவருக்குப் பின்னால் ஜெய் நின்றிருந்தது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளானது.

இந்நிலையில், பிறப்பால் இந்துவான நடிகர் ஜெய், பல வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான உண்மையான காரணம் என்ன என்பதைப் பற்றி தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.


"மசூதியில் எனக்குக் கிடைத்த அமைதி": மனம் திறந்த ஜெய்

"நான் ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவன். சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருந்திருக்கிறேன்; அதேபோல் இயேசு நாதருக்காக மாலை அணிந்து ஒரு வருடம் கடுமையான விரதத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன். அனைத்து மதக் கடவுள்களையும் சமமாக மதிக்கும் பழக்கம் எனக்கு உண்டு.

ஆனால், சில முக்கிய கோவில்களுக்குச் செல்லும்போது தொடர்ந்து பல அவமானங்களை நான் சந்திக்க நேர்ந்தது. சாமி கும்பிடும்போது பிடித்துத் தள்ளுவது, 'சீக்கிரம் கிளம்புங்க' என்று விரட்டுவது போன்ற கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன."

என்று கூறிய ஜெய், தான் மசூதிக்குச் சென்றபோது கிடைத்த அனுபவமே மதமாற்றத்திற்கு முக்கியக் காரணம் என்றார்.

"நான் மசூதிக்கு (Masjid) சென்றபோது, அங்கே என்னை யாரும் ஒரு 'செலிபிரிட்டி'யாகப் பார்க்கவில்லை. தொழுகை நடக்கும் இடத்தில் என்னிடம் யாரும் வந்து தேவையில்லாமல் பேசக்கூட இல்லை. அங்கே கடவுள் மட்டுமே பிரதானமாக மதிக்கப்படுகிறார். என்னுடன் புகைப்படம் (Photo) எடுக்க வேண்டும் என்று கூட யாரும் தொந்தரவு செய்யவில்லை. அமைதியாக, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நாம் இறைவனைத் தொழ முடியும் என்பதை அங்கே நான் உணர்ந்தேன்."

என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Content image

'சட்டென்று மாறுது வானிலை' ரிலீஸ் அப்டேட்

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'சட்டென்று மாறுது வானிலை' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. எனினும், திரையரங்குகளில் 'கருப்பு' திரைப்படம் தற்போதும் தியேட்டர்களில் மிக பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருப்பதாலும், அதன் அதிரடி ஹிட்டினாலும், ஜெய்யின் 'சட்டென்று மாறுது வானிலை' திரைப்படத்திற்குத் தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலான ஷோக்களே (Shows) ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions